Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Tuesday, November 02, 2010

நம்பிக்கை

விடியலை சந்தித்திரா விளக்கு பூச்சிகள்
இரவில் சிறகு விரிக்க தவறியதில்லை

மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும்
விதைகள் விருட்சங்களை விளைவிக்க மறப்பதில்லை

இளைத்தாலும் ஆண் சிங்கம்
இளநரிக்கு வால் பிடிப்பதில்லை

சுட்டாலும் சங்குகளின் சாயம் சாவதில்லை

நண்பா தெரிந்துகொள்
தோல்விகளை கண்டிராத மனிதன்
சரித்திரம் படைப்பபதில்லை !
நம்பிக்கையை நரம்பொடு பின்னிய ஒருவன்
தன்மானம் இழப்பதில்லை !!!


Written on 5-May-2004.

Sunday, September 20, 2009

அவள்...?

பழக எளியவள்,
நளினம் அவள் உடல்...

வன்மையும் மென்மையும் கொண்டவள்,
இடையோ ஆறு...
அவளை போற்றுவதே எனக்கு பேறு !

அவளை ரசித்தவர் நூறாயிரம்,
அதனால் பலர் வடித்தனர் பா ஆயிரம் !

மொத்தத்தில் அவள் ஓர் இனிமை,
அவளை பாடுவதே எனக்கு பெருமை...

என்னுள் நிறைந்தவள்...
என்னை ஈர்த்வள்...
தமிழர் அறிந்தவள்...

அவளே...

என் "தமிழ்த்திருமகள்"

Monday, March 02, 2009

தனிமை

உன் நினைவுகள் என்னை நெருங்கும் போது,
கற்பனை குதிரை கட்டவிழுந்து ஓடும்,
கவிதைகளால் பல காகிதம் நிறையும்,
கனவுகளால் எந்தன் இரவுகள் கழியும்!

எத்தனை நாள் இப்படியே கற்பனையில் கழிக்க!
என்று வந்து என் கண்ணீரை உன் காலடியில் தெலிக்க!
என் மனமும் எப்போதும் உன்னையே நினைக்க.
உன்னை விட்டு ஏன் வந்தேன்
இங்கு நான் தனிமையில் தவிக்க?

Sunday, December 21, 2008

அன்னை

முதன்முதலில் நான் அழுகையில்

அவள் சிரித்தாள்,

என் வாழ்வில் நான் அழுகையில்

அவள் சிரித்த ஒரே நாள்!

அன்று நான் பிறந்தநாள் ! ! !

Tuesday, January 01, 2008

புத்தாண்டு ஆசை !!!

உலகம் மதிக்கும் உயர்ந்த மனிதனாய்,
அனைவரும் வியக்கும் அதிசய மனிதனாய்,
உலகம் என்னை உதாரணம் சொல்லவும்,
உண்மையாய் எனக்கு எண்ணம் இல்லை !

சுருக்கமாய் சொல்கிறேன் - நானொரு சுயனலக்காரன்.
ஆம்,
அன்னை மடியில், அப்பாவின் பிடியில்,
தோல்விகள் என்னை தொடும் போதெல்லாம்,
மழைக்கு குடையாய், என் மனத்திற்கு விடையாய் அண்ணனும்,
எனக்கே என்னை அறிமுகம் செய்து,
எனக்காய் வாழும் என்னவளோடும்,

இப்படி இவர்களோடு வரும் ஆண்டு மட்டுமல்ல,
நான் வாழும் ஆண்டு மட்டும் வாழவேண்டும் !!!

Wednesday, September 19, 2007

College Kavithai - Part 2


அத்தி அவள் இதழ் திறக்க

தத்தி என் கால் நடக்க

பற்றி என் மனம் கொதிக்க

முற்றும் இழந்தது அதன் சக்தி !!!


பட்டன பாதம்,

அதில் கெட்டன மீதம்,

உன் மௌனத்தால் எனைச்சுட்டன போதும்,

இனியும் விடியா விட்டால்

சிதறும் என் வானம் !!!


நித்தம் ஒரு முத்தமென இல்லையடி பித்தம்

உன் நினைவு எனை கொய்துவிட்டு போடும் கோடியுத்தம் ...


பாடுவேன், பெண்ணை நாடுவேன்,

வந்துனக்கு மாலையை சூடுவேன்,

நீ இல்லையெனில் அன்றே நான் கண்களை மூடுவேன்.

=============================================

Wednesday, September 12, 2007

My First College Kavithai


ஆதவன் முன் அந்தி நிலா ஒளி இழக்க கண்டேன்,

அதுதான் இயற்கை,

ஆனால் அந்த நிலவின் முன் ஆதவன் நான் ஒளி இழந்தேனே !!!

என்ன விந்தை !!!


This is my first tamil poem in college which makes me more popular among my friends about the other face of mine... This little imaginary writting paves way for many long, lengthy romantic poems. I will post the most, after getting the approval from my censor board. :-)

Friday, September 07, 2007

Life of Indian Software Engineer




One of the tamil poem that portraits the glimpse of typical Indian software engineer's life style...