Tuesday, November 02, 2010

நம்பிக்கை

விடியலை சந்தித்திரா விளக்கு பூச்சிகள்
இரவில் சிறகு விரிக்க தவறியதில்லை

மண்ணுக்குள் புதைக்கப்பட்டாலும்
விதைகள் விருட்சங்களை விளைவிக்க மறப்பதில்லை

இளைத்தாலும் ஆண் சிங்கம்
இளநரிக்கு வால் பிடிப்பதில்லை

சுட்டாலும் சங்குகளின் சாயம் சாவதில்லை

நண்பா தெரிந்துகொள்
தோல்விகளை கண்டிராத மனிதன்
சரித்திரம் படைப்பபதில்லை !
நம்பிக்கையை நரம்பொடு பின்னிய ஒருவன்
தன்மானம் இழப்பதில்லை !!!


Written on 5-May-2004.