அத்தி அவள் இதழ் திறக்க
தத்தி என் கால் நடக்க
பற்றி என் மனம் கொதிக்க
முற்றும் இழந்தது அதன் சக்தி !!!
பட்டன பாதம்,
அதில் கெட்டன மீதம்,
உன் மௌனத்தால் எனைச்சுட்டன போதும்,
இனியும் விடியா விட்டால்
சிதறும் என் வானம் !!!
நித்தம் ஒரு முத்தமென இல்லையடி பித்தம்
உன் நினைவு எனை கொய்துவிட்டு போடும் கோடியுத்தம் ...
பாடுவேன், பெண்ணை நாடுவேன்,
வந்துனக்கு மாலையை சூடுவேன்,
நீ இல்லையெனில் அன்றே நான் கண்களை மூடுவேன்.
=============================================